திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஏ ஐ டி யூ சி யை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் பேருந்து வரும் பின்புற பாதையில் ஆட்டோக்களை நிறுத்தி மறியல் போராட்டம். இதனால் உள்ளே வரக்கூடிய பேருந்துகள் வர முடியாமத நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் பேருந்துகள் வெளியே வரும் பாதையில் அனைத்து பேருந்துகளையும் உள்ளே அனுப்பி போக்குவரத்து நெரிசலை சமாளித்து வருகின்றனர். ஆட்டோ தொழிலாளர்கள் தங்களுக்கு முறையாக ஆட்டோ நிறுத்துவதற்கான ஸ்டாண்ட் உள்ளிட்டவைகளை அமைத்து தர வேண்டும் என இரண்டு மாதமாக கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இதுவரை மாவட்ட ஆட்சியர் ,மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்காததால் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆட்டோ தொழிற்சங்கங்களுக்கு இடையே மோதல் உருவாகி இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.இரண்டு பேர் காயம் .செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி செய்தியாளருக்கு காவல்துறை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதமாக ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் இடையே திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் முன்புறமும் ,பின் புறமும் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதில் முறையாக எந்த வசதியும் செய்யாமல் இருப்பதால் சிறு மோதல் உருவாகிக் கொண்டிருந்தன. இன்று ஆட்டோ தொழிற்சங்களுக்கிடையே மோதல் உருவாகி இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இரண்டு பேர் காயம் அடைந்து தற்பொழுது ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பொழுது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விபரம்
குமார், (அருண் குமார்) வெட்டு காயம்.
சேக்,ராம் குமார் இரண்டு பேருக்கு காயம் அரசு மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தியில் அழைத்துச் சென்றுள்ளனர்.
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பதட்டத்துடன் காணப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments