திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியாயி(60. இவர் ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருந்த நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக நேற்று (24.10.2021) வீட்டில் இருந்து புறப்பட்டு கருமண்டபத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியாயிடம் 2 வாலிபர்கள் எங்கு செல்கிறீர்கள் என கேட்டனர்.
அதற்கு அவர் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள போவதாக கூறினார். அதற்கு அவர்கள் தடுப்பு செலுத்தப் போகும் போது நகைகளை அணிந்து செல்லக்கூடாது என்றும், கழட்டிக் கொடுங்க பர்சில் வைத்து தருவதாக கூறியதால் 3 பவுன் சங்கிலியை கழட்டிக் கொடுத்தார் முடுதாட்டி. சிறிது தூரம் சென்ற மாரியாயி பர்சை திறந்து பார்த்தபோது அதில் தங்கச்சங்கிலி இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சாலையில் கதறி அழுது புலம்பியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த போலீசார் நடந்தவற்றை முதாட்டியிடம் கேட்டனர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு இரண்டு வாலிபர்களை தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments