தமிழகத்தில் முதன்முறையாக திருச்சியில் இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி - ஒத்துழைப்பு தருவார்களா பொதுமக்கள்?
தமிழக சாலைகளில் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே
தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி மாநகரில் விபத்துகளைக் குறைக்க சோதனை அடிப்படையில் இருசக்கர வாகனங்களுக்குத் தனி வழி அமைக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகரில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த 121 விபத்துகளில் 123 பேரும், 2019-இல் நடைபெற்ற 101 விபத்துகளில் 103 பேரும், இவ்வாண்டு 41 விபத்துகளில் 41 பேரும் உயிரிழந்துள்ளதாக போலீஸாா் தெரிவிக்கின்றனா். இந்த விபத்துகள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன் திருச்சி மாநகரில் விபத்துகளைக் குறைக்கும் வகையில் இருசக்கர வாகனங்களுக்குத் தனி வழி ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தாா். அதன்படி திருச்சி மாநகரில் விபத்துகளைக் குறைக்க முதற்கட்டமாக அகலமானதும், போக்குவரத்து நெருக்கடியால் அதிக விபத்துகள் நடக்கும் தபால் நிலையம் முதல் எம்ஜிஆா் சிலை வரை உள்ள 1250 மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனங்களுக்கு
முதற்கட்டமாக ரூ. 9 லட்சத்தில் இவ்வழித்தடத்தில் உள்ள இரு மாா்க்கத்திலும் கோடுகள் வரையப்படுகின்றன.
சோதனை அடிப்படையிலான இத்திட்டம் அடுத்தடுத்த சாலைகளில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என காவல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
திருச்சியில் தற்போது தலைமை தபால் நிலையம் முதல் எம்ஜிஆர் சிலை ரவுண்டானா வரை அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்லும் மார்க்கத்தில் தபால் நிலையம் மாநகராட்சி அலுவலகம் நீதிமன்றம் பள்ளிக்கூடம் என அத்தனையும் அடங்கியுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் வாகனங்களை அப்படியே பார்க்கிங் செய்துவிட்டு செல்கின்றனர். இதனாலும் கூட விபத்துகள் அதிகம் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.எனவே பொது மக்கள் மனது வைத்தால் மட்டுமே இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்பதே நிதர்சனம்.
ஒரிரு நாள்களில் பணி முடிக்கப்பட்டு இந்தப் போக்குவரத்து விதிமுறை செயல்பாட்டுக்கு வரவுள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த இருசக்கரவாகனங்களுக்கான தனிடிராக் வரவேற்பைப் பொறுத்து தில்லைநகர், கரூர் சாலை மற்றும் மேலப்புலிவார் ரோடு பகுதிகளில் இதனை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து மாநகரப்பகுதிகளில் உள்ள சாலைகளில் இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.