லாரி மோதி டூ வீலர் பெட்ரோல் டேங்க் வெடித்து ஒருவர் பலி - திருச்சியில் பயங்கரம்!!

லாரி மோதி டூ வீலர் பெட்ரோல் டேங்க் வெடித்து ஒருவர் பலி - திருச்சியில் பயங்கரம்!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் வடக்கு பாகனூரை சேர்ந்தவர் ஆரோக்கிய இருதய சாமி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர் சுமார் ஒரு மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பரைக் காண வண்ணாங்கோயில் என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோதுபோது திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த பெட்ரோல் டேங்கர் லாரி திருச்சி பிராட்டியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே வந்த போது மோதி கீழே விழுந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து உடல் முழுவதும் தீ பரவி எரிந்தது. அப்போது அவ்வழியே சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் உடனடியாக தீயை அணைத்து காப்பாற்ற முயன்றனர். ஆயினும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து நீதிமன்ற காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் இறந்த உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேங்கர் லாரி ஓட்டுநர் மிதமிஞ்சிய குடி போதையில் லாரியை ஓட்டி வந்து
மோதியதே விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் ராஜேந்திரனை கைது செய்த போலீசார் தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

Advertisement