மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள் விழா திருச்சி தெற்கு மாவட்ட கழக இளைஞர் அணியின் சார்பாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (27.11.2021) பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது.
தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான இன்று (27.11.2021) மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார் தலைமையில் இன்று யோகலட்சுமி – சரவணன், பானுப்பிரியா – அருண் இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், தேசிங்குராஜா, சக்திபிரகாஷ், ரவீந்திரன், விஷ்ணுவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments