துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு ரத்த தான முகாமினை தொடக்கி வைத்து, ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில் குருதிக்கொடை என்பது ரத்தம் கொடுப்பது மட்டுமல்ல. அது கொள்கை சார்ந்தது. ஆரியனின் ரத்தும் திராவிடனுக்கும், திராவிடனின் ரத்தம் ஆரியனுக்கும், இஸ்லாமியர்களின் ரத்தம் இந்துக்களுக்கும் தானம் செய்து எந்த பிரிவினையும் இல்லாமல் மனித உயிரை காப்பது தான் கொள்கை.
நமக்குள் பிரிவினையை உருவாக்கும் வேலையை ஒன்றியத்தில் இருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் முறியடிப்போம் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments