நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன், பாராளுமன்ற உறுப்பினர்கள் அருண் நேரு, துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள், சௌந்தர பாண்டியன் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision
Comments