தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவின் பிறந்தநாள் வருகின்ற ஒன்பதாம் தேதி கொண்டாடப்படுவதை ஓட்டி திருச்சி மாநகரம் முழுவதும் அவரை வாழ்த்தும் விதமாக திமுகவினர் போட்டி போட்டிகொண்டு பேனர்களை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியின் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக திருச்சி மாநகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கே என் நேருவின் பேனர்கள் காவல்துறையினால் அகற்றப்பட்டது என கூறப்பட்டது .
ஆனால் அது உண்மையல்ல அமைச்சர் ED விவகாரத்தால் அப்செட்டாகி அனைத்தும் பேனர்களையும் அகற்ற சொல்லி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

குறிப்பாக திருச்சி நீதிமன்றம், எம்ஜிஆர் சிலை, மேஜர் சரவணன் சாலை, கருமண்டபம், பொன் நகர் மற்றும் பிராட்டியூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கே என் நேருவின் பேனர்கள் இறக்கப்பட்டு திருப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கே என் நேரு இந்த வருட பிறந்த நாளை ஆரவாரம் இல்லாமல் அனுசரிக்க அமைச்சர் தரப்பு

உத்தரவிட்ள்ளதாக தெரிகிறது.இன்னும் பேனர்கள் அங்கிருந்து அகற்றபடவில்லை அமைச்சர் மனம்மாறி மீண்டும் வைக்க சொல்லி விடுவார் என்ற ஆசையில் காத்திருக்கின்றனர் திமுக நிர்வாகிகள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments