தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து பணிபாதுகாப்பு வழங்கவேண்டும், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைத்திடவேண்டும், பெண்

பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், மேலும் ஈட்டிய விடுப்பு மற்றும் ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் 8வது நாளாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவுக்கு வாக்களித்து தங்களது வாழ்வை பறிகொடுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டியும், தங்களை அரசு கண்டுகொள்ளாததை தெரிவிக்கும் விதமாக தலைவிரி கோலத்துடன் கண்களை கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எட்டு நாட்களாக எங்களுடைய போராட்டம் தொடர்கிறது எங்களுடைய கோரிக்கையை நிறைவேறாவிட்டால் பொங்கல் திருநாள் சாலையில் தான் என பெண்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments