திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகவும், திருமங்கையாழ்வரால் பாடல் பெற்ற இத்தலம் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும்.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்ட விழா கடந்த 21ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் வைகாசி தேர்த்திருவிழாவின் நிறைவு நாளில் சௌந்தர்ய பார்வதி சமேத பிச்சாண்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் நடைப்பெற்று மகா தீபாதாரனை நடைப்பெற்றது. தொடர்ந்து ஆளும் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments