திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வருகிற 03.12.2021 முதல் 24.12.2021 வரை வைகுந்த ஏகாதசி பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு நாளை 10.11.2021 புதன் கிழமை காலை 10.00 – 11.00 மணிக்குள் வைகுந்த ஏகாதேசி பெருவிழாவிற்கான முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் அருகில் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் நடைபெற உள்ளது.
வைகுந்த ஏகாதேசி  பெருவிழா 03.12 .2021 அன்று திருநெடுந்தாண்டகமும், O4.12.2021 முதல் 13.12.2021 வரை பகல் பத்து திருவிழாக்களும், 13.12.2021 அன்று ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலமும், முக்கிய திருநாளான ஸ்ரீ நம் பெருமாள் இரத்தினங்கியுடன் பரமபத வாசல் திறப்பு
14.12.2021 செவ்வாய் கிழமை காலை 04.30 – 05.45 மணிக்குள் நடைபெறும். மேலும் 20.12.2021 ஸ்ரீநம்பெருமாள் கைத்தல சேவையும், 21.12.2021 அன்று திருமங்கை மன்னன் வேடுபறி திருவிழாவும், 23.12.2021 அன்று தீர்த்தவாரியும், 24.12.2021 அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்ச்சம் நிகழ்ச்சியுடன் வைகுந்த ஏகாதேசி பெருவிழா நிறைவு பெறும்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments