Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பாட்டில் மணி வகையறாவின் வன்மம் – அலலேக்காக தூக்கிய எஸ்பி

தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில் தாலுகா, மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த முப்புட்டாதி என்பவரது மகன் காளிராஜ் (24) என்பவர் தனது நண்பரின் தம்பி கவிமணி என்பவர் வாகனவிபத்தில் காயம்பட்டு, சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருங்களூரில் உள்ள SRM மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரை பார்த்துவிட்டு. தனது வீட்டிற்கு செல்வதற்காக SRM பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர், தனது பெயர் வசந்த் என்றும், காளிராஜிடம் நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என கேட்டதற்கு திருச்சிக்கு செல்ல வேண்டும் என கூறி உள்ளார்.

அவரிடம் உதவி செய்கிறேன் எனக்கூறி, மேற்படி வசந்த் அவரது வாகனத்தில் காளிராஜ்-ஐ ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி சென்ற போது தனது விட்டிற்கு சென்றவுடன் திரும்பி வந்துவிடாலம் என கூறி இருங்களுர் குடிசை மாற்று வாரியம் 5-ம் நம்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு கதவை மூடி தாழ்ப்பாள் போட்டுள்ளார். அப்போது அங்கு மது, கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த கவியரசன், யுவராஜ், ரவி போஸ்கோ மற்றும் அய்யனார் ஆகியோர்களை வசந்த் அறிமுகப்படுத்தியதாக தெரிய வருகிறது. சிறிது நேரத்தில், மேற்படி எதிரிகள் அனைவரும், தங்களுடன் இயற்கைக்கு மாறாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு காளிராஜ்-ஐ வற்புறுத்தியுள்ளனர். ஆனால் காளிராஜ் மறுத்துள்ளார். ஆனால் எதிரிகள் அதனை பொருட்படுத்தாமல், பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டியும், அவரை வலுக்கட்டாயமாக தாக்கியும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

அதன் பின்னர், காளிராஜிடம் அவரது சாதி குறித்து விசாரித்து, அவரது ஜாதிப் பெயரைக் கூறி இழிவான வார்த்தைகளால் திட்டி. பயங்கர ஆயுதங்களைக் காட்டி காளிராஜிடம் இருந்த செல்போன் மற்றும் ரூபாய் 1100-ஐ ஆகியவற்றினை கூட்டாக பறித்துக்கொண்டனர். இந்நிலையில் மேற்படி காளிராஜ், எதிரிகளிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி அழுதபோது, இங்கு நடத்த சம்பவங்களை வெளியே கூறினால் உன்னை காலி செய்து விடுவோம் எனக்கூறி வசந்த் தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி மெயின் ரோட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்று விட்டார்.

இதனை தொடர்ந்து காளிராஜ் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று டீக்கடைகாரரிடம் போன் வாங்கி திருச்சி மாவட்ட காவல் உதவி எண்ணுக்கு போன் செய்து நடந்த சம்பவத்தினை தெரிவித்தார். மேற்படி எதிரிகள் தாக்கியதன் காரணமாக தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்த காளிராஜிடம் சமயபுரம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்து ஐந்து நபர்களையும் உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்டுள்ள 5 பேர், பிரபல ரவுடியான பாட்டில் மணியின் கூட்டாளிகள். பாட்டில் மணி ஏற்கனவே திருச்சி மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருடைய கூட்டாளிகள் (ஓரினசேர்க்கையாளர்), இவர்களிடம் அப்பாவி ஒருவரையும் முரட்டுத்தனமாக கட்டி தொங்க விட்டு உதைத்து அடிக்கும் கொடூரத்தின் உச்சமான காட்சிகளும் பதிவு செய்துள்ளனர்.

பாட்டில் மணி காரைக்கால் முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில்தொடர்புடைய பெண் தாதா எழில்லரசி கூட்டத்தைச் சேர்ந்தவன் என்றும் பாட்டில் மணி மீது 5 கொலை வழக்கு உட்பட 23 வழக்குகள் உள்ளது. இதில் 19 வழக்குகள் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்

கொடூங் குற்றச் செயல்களில் ஈடுபவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் போலீசார் என்கவுண்டர் செய்ய உள்ளதாக குற்றவாளிகளின் உறவினர்கள் வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால் குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லையென போலீசார் புலம்புகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *