திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கழக கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர அவைத் தலைவர் நூர்கான் அவர்களின் தலைமையில்,
மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன், முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரங்கல் தீர்மானம் –
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து அவர்களின் மறைவு, 47வது வட்ட கழக செயலாளர் நாகவேணி மாரிமுத்து அவர்களின் தாயார் வே.ஆரியமாலை மறைவு, 12வது வட்ட கழக செயலாளர் சிவகுமார் அவர்களின் தாயார் ஞானம்பாள் மறைவு மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 31வது மாமன்ற உறுப்பினர் சுஜாதா அவர்களின் மறைவிற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறன்.
பொது தீர்மானம் –
ஐம்பது ஆண்டு காலமாக பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர், தியாக செம்மல் – கழக தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தான் செல்லும் எல்லா இடங்களிலும் ஒருமையில் பேசும் தற்குறி எடப்பாடியை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.
திருச்சி தெற்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் 40% இலக்கை அடைவதற்கு பலமுறை களத்திற்கு சென்று மக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு கழக நிர்வாகிகளிடம் அனுதினமும் தொலைபேசியில் உரையாடி இலக்கை அடைவதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் பகுதி, வட்ட கழக செயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் BLA2, BDA அவர்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவித்து மற்றும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றபடுகின்றது.
கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது இல்லற வாழ்க்கையில் 50-வது ஆண்டுகளை கடந்து பொது வாழ்க்கையிலும் இல்லற வாழ்க்கையிலும் சிறப்பாக பணியாற்றுகின்றார் அவருக்கு இக்கூட்டமானது தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
இக்கூட்டத்தில் மாநகரக் கழக நிர்வாகிகள் சந்திரமோகன் தமிழ்ச்செல்வன் பொன் செல்லையா சரோஜினி பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், மோகன், பாபு, விஜயகுமார், ராஜ் முஹம்மத், மணிவேல், சிவக்குமார், நகர கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் நகர அணி அமைப்பாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி மன்ற உறுப்பினர்கள் நகர வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments