Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் டாம்கோ கடன் திட்டங்கள் குறித்து லோன் மேளா நடைபெறவுள்ள இடங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கான கல்விக் கடன், தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்கான கடன், கறவைமாடு கடன், ஆட்டோ கடன் ஆகியவை வழங்கும் சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட விபரப்படியான இடங்களில் நடத்தப்பட உள்ளது. 

டாம்கோ கடன் திட்டங்கள் குறித்து லோன் மேளா நடைபெறவுள்ள இடங்கள்

எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய 
ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட 
அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ் கல்விக் கட்டணங்கள் செலத்திய இரசீது/செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்கனையும் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட நாட்களில், கூட்டுறவு வங்கிகளில் நடைபெறவுள்ள கடன் முகாம்களில் திருச்சிராப்பள்ளி மாவட்ட சிறுபான்மையின மக்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *