திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஸ்ரீ அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா சித்திரை முதல் நாள் அன்று திருவிளக்கு பூஜையுடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சித்திரை 15 அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தினசரி மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு நாள் இரவும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் திருவீதியுலா நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று இரவு 24மனை தெலுங்கு செட்டியார் மண்டகப்படியை முன்னிட்டு அம்மன் காஞ்சி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் செண்டை மேளம் முழங்க திருவீதியுலா நடைபெற்றது. வீதிகளின் வழியாகச் சென்ற அம்மனுக்கு வீடுகள் தோறும் மக்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments