Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

45 ஆண்டுகளான ஸ்ரீரங்கம் அடிமனை வழக்கில் தீர்ப்பு – 3 மாதத்தில் காலி செய்ய உத்தரவு

நீதிபதி சுவாமிநாதன் தனது தீர்ப்பில்,
இந்த வழக்கானது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
சித்திரை வீதி, உத்திர வீதி, அடைய வளஞ்சான் வீதிகளில் வசித்து வரும் 40க்கும் மேற்பட்டவர்கள் அடிமனை கேட்டு வருகிறார்கள்.

அடிமனை அரங்கனுக்கு சொந்தமானது.
எனவே, அதில் வசிப்போர் சொந்தம் கொண்டாட முடியாது என தீர்ப்பளித்தார்.
மேலும், 3 மாதங்களில் அந்த வீடுகளை காலி செய்ய வேண்டும். கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களையும் ரத்து செய்ய உத்தரவிட்டார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றி உத்திரவீதி, சித்திர வீதி, சாத்தார வீதி, வடக்கு வீதி, கீழ அடையவளஞ்சான் வீதி, மேல அடையவளஞ்சான் என்று ஸ்ரீரங்கம் நகர் முழுவதும் சுமார் 360 ஏக்கர் நிலம் கோவிலுக்கு சொந்தமானது. இந்த இடத்தில் பலதலைமுறைகளாக, நுாறு ஆண்டுகளுக்கு மேல் பல வீடுகள் கட்டி இருந்து வருகின்றனர்.

இதனால் அந்த இடங்களை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரி வருகின்றனர். ஆனால் கோவில் நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கிடையே, 2010-ம் ஆண்டுக்கு முன் பலருக்கு பட்டா வழங்கப்பட்டது. பின் அதுவும் நிறுத்தப்பட்டது. இதனால் மேற்கண்ட 360 ஏக்கர் நிலத்தில் எந்த பத்திரப்பதிவும் நடத்த முடியாத நிலை உள்ளதால், ஸ்ரீரங்கத்தில் வீடு வாங்க, விற்க முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி பொதுமக்கள் சட்டப்போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ஸ்ரீரங்கம் கோவில் இடத்தில் குடியிருந்துவரும் சுமார் 29 உரிமையாளர்களை இடத்தை காலி செய்து, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் பல கட்டமாக வழக்கு தொடர்ந்தது. பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த 29 வழக்குகளில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், சம்பந்தப்பட்ட குடியிருப்பு வாசிகள் 29 பேரும் இடத்தை காலி செய்து, அதில் உள்ள கட்டுமானங்களை இடித்து, காலிமனையாக 3 மாதத்துக்குள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும், இல்லை என்றால் கோர்ட்டு செயல்முறைகள் மூலம் கட்டுமானங்களை அகற்றி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் மேற்கண்ட இடங்களை சார்பதிவாளர் பதிவு செய்ய நிரந்தர தடை விதிக்கப்படுகிறது. இதுவரை அங்கு குடியிருந்ததற்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். வழக்கு தொடரப்பட்ட நாளில் இருந்து இடம் ஒப்படைக்கப்பட்ட தேதி வரை எதிர்கால லாபத்தை தனியாக பேசி முடிவுசெய்து கொள்ள வேண்டும் என்று நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு கூறினார்.

ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினையில் சிக்கி தவிக்கும் என் உரிமையாளர்கள் இந்த தீர்ப்பால் கலக்கத்தில் உள்ளனர் மூன்று மாதத்தில் நீதிபதி காலி செய்ய உத்தரவிட்டுள்ளார் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன நிகழப் போகிறது என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *