திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுக்கா திருவாசி ஊராட்சியில் மயில் குரங்கு உள்ளிட்டவைகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் திருவாசி பகுதியில் குரங்கு ஒன்றின் வலது முன்னங்கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த கால்நடை மருத்துவர் சென்னாகேசவன் மற்றும் வனத்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் குரங்கை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் துண்டிக்கப்பட்ட கால் இணைப்பதற்காக குரங்கை சென்னை அல்லது தஞ்சாவூர் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இன்று விடுமுறை நாளில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்து குரங்கிற்கு சிகிச்சை அளித்த கால்நடைத்துறை மருத்துவர் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் குரங்கு கால் துண்டிக்கப்பட்டது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments