திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரசு கலைக்கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் BA வரலாறு முதலாம் ஆண்டு படித்து வரும் மஞ்சுளா என்ற மாணவியை, அதே துறையைச் சேர்ந்த கிருபாகரன் என்ற மாணவன் முதலில் கல்லூரி வளாகத்தில் அவமதித்ததாக கூறப்படுகிறது.
இதனை மாணவி மஞ்சுளா கண்டித்துள்ளார், தொடர்ந்து அந்த மாணவியை கிருபாகரன் வம்பு இழுத்து மிரட்டி தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறை பேராசிரியரிடம் மஞ்சுளா புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து மஞ்சுளா துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த கிருபாகரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று கல்லூரி கேண்டினில் இருந்த மஞ்சுளா மற்றும் அவருடன் இருந்த ராஜேஷ் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மாணவி தாக்குதலுக்கு உண்டான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து துவாக்குடி போலீசார் இரு தரப்பினர் இடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியை செருப்பால் அடித்து தாக்கிய வீடியோ வைரலான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments