திருச்சி திருவெள்ளரை கோயிலில் பணி புரியும் ஒரு ஊழியர் நெற்றி நிறைய திருமண் இட்டுக்கொண்டு கோயில் நந்தவனத்திலேயே செய்த செயல், கோயில் எல்லைகளை தாண்டி முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
திருச்சியில் இருந்து துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது திருவெள்ளறை புண்டரிகாஷ பெருமாள் கோயில். 1300 வருடங்கள் பழமையான இந்த கோயிலில் திருமங்கையாழ்வார்யால் மங்கள சாசனம் செய்து 24 பாசுரங்கள் பாடியுள்ளார். இங்குதான் சஷ்டி கிணறு அற்புதமான கட்டிட அமைப்பு இங்குதான் உள்ளது. கோயில் மேறேபார்வையாளர் சுரேஷ் என்பவர் பட்டப் பகலில் தரிசனத்திற்கு வந்த பெண் பக்தருடன் கோயில் நந்தவனத்தில் தகாத முறையில் நடந்து கொண்டு ஆபாச வீடியோ வெளியாகி பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய பொழுது எனக்கு 53 வயதாகிறது திருமணம் ஆகவில்லை. நான் இதற்கு முன் எந்த தப்பிலும் ஈடுபடவில்லை.இந்த கோவிலில் மூன்றாண்டுகள் பணிபுரிந்து உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் அவரை பணியிட மாற்றம் செய்துள்ளார். மேலும் அவர் தொடர்பான வீடியோ தொகுப்புகள் ஆதாரங்கள் கிடைத்தவுடன் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் ஸ்ரீரங்க கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் நேற்று இரவு அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் அக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்தனர். இனி இது போன்ற சம்பவம் கோவிலுக்குள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
“கோயில் கூடாது என்று சொல்லவில்லை; ஆனால் கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது” என்று பராசக்தியில் வசனம் வந்து பல தசாப்தங்களை கடந்து விட்டாலும் நிலைமை அப்படியே தான் இருக்கிறது என புலம்பல் குரல் கேட்கிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments