திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் அருகே திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் நாமக்கல்லை நோக்கியும், திருச்சி நோக்கியும் சென்ற வாகனங்களை மறித்து இரவு நேர ரோந்து வாகனத்தில் இருந்த போலீசார் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என கூறப்படும் வாலிபர் ஆகியோர் திருச்சி – நாமக்கல் சாலையில் ஏலூபட்டி அருகே உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி அருகே திருச்சி – நாமக்கல் செல்லும் வாகனங்களை மறித்து லஞ்சம் கேட்டது போல சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை செய்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார், தொட்டியம் காட்டுப்புத்தூர் பகுதியில் ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த வடிவேல் செல்வம் ஆகிய இரண்டு எஸ்.எஸ்.ஐ-களையும், தலைமை காவலர் பாலச்சந்திரன், முதன்மை காவலர் சாந்தமூர்த்தி, காவலர்கள் நந்தகுமார், அண்ணாமலை, ஆகிய நான்கு காவலர்களையும் மொத்தம் ஆறு போலீசார்களை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என கூறி திருச்சி – நாமக்கல் சாலையில் வாகனங்களை மறித்து பணம் வசூல் செய்த முசிறி தா.பேட்டை ரோட்டில் வசிக்கும் ராஜ்கமல் (32) என்பவரை காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments