Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்தி ஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குருஅன்புசெல்வன் ஆகியோர் தலைமையில் ரயில்வே ஜங்ஷன் எதிரே உள்ள காதி கிராப்ட் அருகில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவனுக்கு மத்திய அரசு உடனடியாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், தமிழக அரசு பரிந்துரைத்த வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராஜேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திருச்சி – கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகிகள் அரசு, புரோஸ்கான், விஜயபாலு, அஷ்ரப்அலி மற்றும் மாவட்ட நிர்வாகி சந்தனமொழி, மாநில மகளிர் அணி செயலாளர் லட்சுமிபிரியா, கஸ்தூரி, நிர்வாகிகள் சிறுத்தை குணா மற்றும் கட்சியினர் ஜெயக்குமார், செல்வகுமார், இனியவன், தண்டபாணி, முருகேசன், விஜி ,

எட்வின், மீரான்பாய்,, செண்பகத் தமிழன் ராஜவேல் பழனிவேல் மாங்குடி கமல், ஜொனவாலிசி, எமல்டா, விஜயகுமார், துரைசங்கர், கவியரசன் மணிவளவன் இளையராஜா, தேவி, அயிலை மூர்த்தி, சிறுத்தை குணா, அசோக்மேத்தா, செங்கதிர்செந்தில், கணேசன்,
மாநில, மாவட்ட, நகர, நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஏராளமான கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *