விக்னேஷ் ஸ்ரீரெங்கா  மெட்ரிக் பள்ளியின் Atal tinkering lab  துவக்கவிழா

விக்னேஷ் ஸ்ரீரெங்கா  மெட்ரிக் பள்ளியின் Atal tinkering lab  துவக்கவிழா

விக்னேஷ் ஸ்ரீரங்கா மெட்ரிக் பள்ளியில் இன்றுATAL TINKERING LAB அடல் டிங்கரிங் லேப் துவக்கவிழா நடைபெற்றது.

 திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் கணினி அறிவியல் துறையின் தலைவர் முனைவர்  ராஜேஸ்வரி ஸ்ரீதர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆய்வகத்தை திறந்து வைத்தார் .


விக்னேஷ் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர்  லட்சுமி பிரபா கோபிநாத்  விழாவிற்கு தலைமை தாங்கினார் .ஆலோசகர் திருமதி மலர்விழி அவர்கள் சிறப்புரை வழங்கினார். மாணவர்களுக்காக தன்னை எப்போதும் மேம்படுத்த புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையிலான செயல்முறைகளுக்கு  இந்த ஆய்வகம் தூண்டுதலாக அமைகிறது .
நாடு முழுவதும் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் மத்திய அரசின் மூலம் NITI Aayog செயல்படுத்தி வருகிறது. இந்த விழாவினை குறித்து பள்ளியின் முதல்வர்  விஜயலட்சுமி நம்மிடம் கூறியதாவது,   அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த ஆர்வமிக்க மாணவர்களுக்கு உதவும் ஒரு புதுவித முயற்சியாகும் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் NITI Aayog .
எப்போதும் அறிவியல்  கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் இருந்துகொண்டேதான் இருக்கும் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க புதையல் போன்றது.


 அறிவியல் வளர்ச்சி  என்பது நீண்டுகொண்டே செல்லும் பாதை ஆகும். இதில் மாணவர்களின்  திறனும் அதுவும் இன்றைய காலகட்ட மாணவர்கள் அறிவியல் சார்ந்த வளர்ச்சியில் மிகவும் ஆர்வமாக உள்ள நிலையில் இதுபோன்ற ஆய்வக வசதிகள் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைகிறது புதுமையான முயற்சிகள் செய்யும் போது அதற்கான உந்துதல் சக்தியும் தேவையான உபகரணங்கள் கிடைக்கும். பொழுது வெற்றி மிகவும் எளிதில் கிடைக்கிறது அறிவியல் ஆய்வகங்கள் மேலும் அறிவியல் மாணவர்களின் அறிவியல் சார்ந்த அறிவையும் மேம்படுத்த உதவுகிறது என்று கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!


https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

G-QSXGXN2B7K