திருச்சி விமான நிலையத்தில் 9:30 மணிக்கு வந்து காலை 10:00 மணிக்கு புறப்பட்ட விஜயின் பிரச்சார வாகனம் 12:30 மணி அளவில் வரவேற்பு பகுதியை வந்தடைய இவ்வளவு நேரம் எடுத்துள்ளது.
இன்னும் பிரச்சார இடத்திற்கு விஜய் செல்ல இரண்டு மணி நேரம் ஆகுமாம் தொண்டர்கள் வெள்ளத்தில் நீந்தி செல்லும் த.வெ.க தலைவர் வாகனத்திற்க்கு வழி நெடுகிலும் தன் வாகனத்தின் அருகில் வரும் தொண்டர்களுக்கு கைகுலுக்கியபடி விஜய் செல்கிறார்.
விஜயின் பிரச்சார வாகனம் ஒருவர் நடந்து செல்லும் பொழுது என்ன வேகத்தில் நடப்போமோ அந்த அளவில் தான் நகர்கிறது.
இதேநிலை நீடித்தால் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையை தொடுவதற்கு மாலை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலையத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் வரை நத்தை போல் ஊர்ந்து வந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் வாகனம் ஒட்டுமொத்தமாக திருச்சியே ஸ்தம்பித்து விட்டது திருச்சி மாநகரில் உள்ளவர்கள் எங்கிருந்தும் எங்கேயும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது இன்னும் அவர் பேசக்கூடிய இடமான மரக்கடை பகுதிக்கு வரவே இல்லை.
திருச்சி மாநகரின் விமான நிலையம், ரயில்வே சந்திப்பு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலைகள் அனைத்தும் முடங்கியுள்ளது.
விஜயின் தொண்டர்கள் மட்டுமல்லாது ரசிகர்கள், பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் இந்த பரப்புரை வாகனத்தை சூழ்ந்து நிற்கின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments