விஜய் ஜனநாயகன் படம் ஒன்பதாம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருந்தது இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் நீதிமன்றத்தை தயாரிப்பாளர் தரப்பு நாடினர் இன்று அதற்கான தீர்ப்பு வெளியானது சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி ஜனநாயகம் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்
இதனை அடுத்து திருச்சி மாவட்ட தளபதி ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஆர் கே ராஜா தலைமையில் ரசிகர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வெடி வெடித்து இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர் அங்குள்ள பயணிகள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அவர்கள் மகிழ்ச்சி சிறிது நேரம் இருந்தது மீண்டும் தணிக்கை வாரியம் மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளதால் அதையும் வென்று படம் விரைவில் திரையிடப்படும் என்று நம்பிக்கையை விஜய் ரசிகர்கள் தெரிவித்து சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments