2026 சட்டமன்ற தேர்தலில் தளபதி விஜய் முதலமைச்சராக வேண்டி முன்னாள் அமைச்சர் கு .ப. கிருஷ்ணன் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் திருவானைக்காவல் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இன்று காலை முதல் பேருந்து நிலையங்களில் இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்குதல், பகுதிவாரியாக நலத்திட்ட உதவிகள், தலைமை அரசு மருத்துவமனை முதியோர் இல்லங்களில் உணவு வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நாள் முழுவதும் நடத்தப்பட்டது அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில்
முன்னாள் அமைச்சர் கு .ப. கிருஷ்ணன் தலைமையில் RD சிவபாலன் ஏற்பாட்டில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தளபதி விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டனர்…
இந்த நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரா, திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் விக்னேஸ்வரன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்

ஜீவா சௌகத், சுமங்கலி சம்பத் மற்றும் அருள்ஜோதி எனர்ஜி அப்துல் ரகுமான் மற்றும் பகுதி, ஒன்றியம் ,வார்டு, கிளை, சார்பு அணிகள், சார்ந்த நிர்வாகிகள்,கழக தொண்டர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கத் தேரை இழுத்து வழிபட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments