Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விஜய் அதிமுகவுடன் தோழமையாக இருப்பது போல் தெரிகிறது-திருமாவளவன்

No image available

திருச்சி மாவட்டம், விரகலூரில் ஸ்டேன்வாமியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

கட்சி தீவை எதற்காக விட்டு தர மாட்டேன் என இலங்கை வெளி உறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு?கச்சத்தில் இந்தியாவுக்கு உரியது குறிப்பாக தமிழக மக்களுக்கு உரியது காலகாலமாக அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்பது வழக்கம்.இந்திய அரசு அரசியல் காரணங்களுக்காக இலங்கைக்கு தாரை வார்த்ததை நாம் அறிவோம். அது ஒரு வரலாற்றுப் பிழை அதனை சீர் செய்ய வேண்டும் கட்சத்தீவை மீட்டு தர வேண்டும் என்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்திய அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது வேதனை கூறியது.இலங்கை வெளிவகாரத்துறை அமைச்சர் கூறியிருப்பது தமிழர்களுக்கு எதிரானது என்பதை விட இந்தி தேசத்துக்கு விரோதமான கருத்து. அதற்குரிய விளக்கத்தை தர வேண்டும்.தமிழக மக்களின் நீண்ட நாள் கலாச்சார உரிமையும் மீட்டு தருவதற்கு ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிகள் மீது வழக்கமாக முன்வைக்கக்கூடிய விமர்சனம் குற்றச்சாட்டுகளும் இதுவும் அடங்கும்.அஜித்குமார் கொலையும் பொறுத்தவரை முதல்வர் உடனே தலையிட்டு துணிச்சலான முடிவு எடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் தாயாரை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் இந்த கடும் துயரத்திற்கு சற்று ஆறுதலை தருகிறது.எதிர்க்கட்சித் வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததுஎன அரசியல் அணுகுமுறையை கையாளுகிறார்கள்.எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் திமுக எடுக்கிற நிலைப்பாடுகள் எல்லாம் அவர் இது போன்ற கருத்துக்களை சொல்லி வருகிறார்.அது அவருடைய பார்வை, அவருடைய அரசியல் அதனை நாம் விமர்சிக்க முடியாது.திமுக முன்எடுக்கிற முயற்சிகள் பொதுவாக ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக உரிமையாக இருக்கிறபோது அதனை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது.

 ஓரணியில் நாடு யாருக்கு எதிராக என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.தேசிய அளவிலான பார்வையுடன் கூடிய கருத்தாக நான் பார்க்கிறேன்.கல்வித்துறை வழங்கக்கூடிய நிதியை கூட வழங்க மறுக்கிற பாஜக அரசு எதிர்க்க அவர்களின் சனாதான செயல்திட்டத்தை முறியடிக்க தமிழகத்தில் சங்பரிவார் அரசியல் எந்த வகையில் நுழையாமல் தடுக்க அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஓர் அணியில் திரள வேண்டும்.அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் விளக்கத்தை அளித்துள்ளார் அந்த பொருளில் நான் சொல்லவில்லை நட்பின் அடிப்படையில் மரியாதை நிமித்தமாக தான் ராமதாசை சந்தித்தேன்திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் புதிதாக கட்சி சேர்வதாக இருந்தால் அந்த முடிவை எடுக்கிற அதிகாரம் தமிழக முதல்வருக்கு தான் உண்டு என்பதை தெளிவு படுத்திவிட்டார்.

அப்பாவும், மகனும் ஒரு கட்டத்தில் ஒன்று சேருவார்கள் என நான் நம்புகிறேன். ஒரே பாமகவாக தான் தேர்தலை சந்திப்பார்கள்.ஏற்கனவே நடிகர் விஜய்க்கு எக்ஸ்பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியுள்ளது. தாமதமாக எடப்பாடிக்கு ஒன்றிய அரசு வழங்கி உள்ளது என்றாலும்கூட அவர் பாதுகாப்புக்காக ஒன்றிய அரசு எடுத்து இருக்கிற இந்த நிலைப்பாட்டு எங்கள் கட்சி வரவேற்கிறது.அந்த கூட்டணியில் பெரிய கட்சி, அதிக வாக்கு எண்ணிக்கை உள்ள கட்சி அதிமுக தான். தேர்தலுக்குப் பின்பு தான் முதல்வர் தேர்ந்தெடுப்போம் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது என்றால் எடப்பாடி அவர்கள்தான் கருத்துச் சொல்ல வேண்டும். நான் கருத்து சொல்ல ஏதும் இல்லை.

திமுக, பாஜக கொள்கை எதிரியான கூறிவிட்டார். அதிமுக பற்றிய எதுவும் சொல்லவில்லை. விமர்சனமாக சில கருத்துக்கள் சொன்னாலும் கூட அதிமுக எதிரி தான் என அரிதிவிட்டு அவர் கூறவில்லை. அங்கே கேள்வி எழுகிறது.திமுகவை ஆளுங்கட்சி என்ற முறையில் எதிர்க்கிறார்.பாஜகவை தமிழர்களுக்கு விரோதமான கட்சி என்று எதிர்க்கிறார்.அதிமுகவை தோழமை கட்சியாக பார்க்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அவர் தானே விடை சொல்ல வேண்டும்.பாஜக தான் சிவசேனாவை உடைத்தது. அவர்கள் கட்டுக்கோப்பாக இயங்கி வந்தார்கள்.மராட்டிய மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்கள்.

மாநில மொழி உரிமைக்காக குரல் கொடுத்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் இரண்டாம் மூன்றாக உடைப்பது 

 பாஜகவின் அரசியல் தந்திரம். 

மாநில உரிமைகள் பேசுகிறது கட்சிகளை வளர விட மாட்டார்கள் அந்த அடிப்படையில் உடைத்தார்கள்.காலம் தாழ்ந்தாலும் அதை உணர்ந்து ஒன்று சேர வேண்டும் என முன் வந்திருக்கிறார்கள் என்றால் நான் வரவேற்கிறேன் பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் கனியமுதன் சக்தி ஆற்றல் அரசு முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன், குரு அன்புச்செல்வம், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *