திருச்சி ரயில் கல்யாண மண்டபத்தில் தன் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவை நடத்தி வைத்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த ஜி கே வாசன்…. மாதந்தோறும் தமிழகத்திற்கு முறையாக சரியாக தவறாமல் கொடுக்கக்கூடிய தண்ணீர் கர்நாடக அரசு கொடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் உயிர் பிரச்சனையாக இருப்பதால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 13.28 டி.எம் சி தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

விவசாய கருவிகள், அறுவடை இயந்திரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கட்சி பாகுபாடு இன்றி வழங்க வேண்டும். அரசியல் கூட்டணிகளுக்கு அப்பாற்பட்ட அரசாக திமுக அரசு செயல்பட வேண்டும். திருச்சி புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கும் விதைகளை தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கங்கள் வாயிலாக வழங்க வேண்டும்.அரசு பஸ்களை முறையாக பராமரித்து, விபத்துக்கள் ஏற்படா வண்ணம் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் வேளாண் இயந்திரங்கள கட்சி்சி பாகுபாடு இன்றி பதிவு மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும்.

அரசியல்கட்சிகளின் பரிந்துரைப்படி வழங்குவதை நிறுத்த வேண்டும். நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சியின் கொள்கை கோட்பாடுகள் அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும். மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதற்காக கொள்கை கோட்பாடுகளை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கட்சியின் ஏடீம், பி டீம் என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு.

அவருடைய கட்சி செயல்பாடுகள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் பருவ மழை துவங்கி இருப்பதால், சுகாதாரத்துறை டெங்கு போன்ற நோய் பரவாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           133
133                           
 
 
 
 
 
 
 
 

 07 November, 2024
 07 November, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments