புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்கள் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று திருச்சி காங்கிரஸ் தலைமை அலுவலகமாக அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு தாக்குதலில் வீரமடைந்த வீரர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
தொடர்ந்து தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சார்ந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதித்தொகை வழங்கினார்
தொடர்ந்து செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: காங்கிரஸ் உறவாடி கெடுக்கும் என நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார் என்ற கேள்விக்கு?
நாங்கள் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் போது எத்தனை ஆட்சியை கவிழ்த்து இருக்கிறோம்
ஆனால் இவர்கள் அருணாச்சல பிரதேசத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் அதை முடக்கினார்கள்
மக்கள் தீர்ப்புக்கு பிறகு எங்களது ஆட்சியை கவிழ்த்தார்கள் கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தார்கள்
பொம்மையின் தீர்ப்புக்கு பிறகு எந்த சம்பவமும் நடக்கவில்லை வரலாறு தெரியாமல் பாஜக பேசி வருகிறது அவர் வரலாற்றை படிக்க வேண்டும் என்றார்
பிளாட்பாரத்தில் உள்ளவர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்துள்ளோம் அவர்களுக்கு வீட்டு முகவரி இல்லை என்கின்றனர் ஆனால் மோடி வீடு இல்லாதவர்களே இல்லை என தெரிவித்தார் அவர்கள் பேசுவதை அவர்களே கவனிப்பது இல்லை
எங்கள் தலைவர் ராகுல்காந்தி ஜனநாயகத்திற்காக தொடர்ந்து குரல்கொடுத்து கொண்டுள்ளார்
இந்த மக்களுக்கும் கடைசி நம்பிக்கையாக உள்ளது வாக்குரிமை அந்த வாக்குரிமையை பறிக்காதீர்கள் என்று மக்கள் முகமாக மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குரல்கொடுத்து கொண்டுள்ளார்
பாமக குறித்து கேட்ட கேள்விக்கு?
அது தந்தை மகனுக்கான பிரச்சனை உட்கட்சி பிரச்சனை நாம் ஒன்றும் கருத்து சொல்வதற்கு இல்லை என தெரிவித்தார்
துணை ஜனாதிபதி தேர்தலில் 12 பேர் மாற்றி வாக்கு அளித்து உள்ளனர் என்ற கேள்விக்கு?
யார் அப்படி வாக்கு அளித்தார்கள் என தகவல் இல்லை அதை பத்திரிகையாளர்கள் அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் யார் வாக்களித்து இருக்கிறார்கள் செல்லாத ஓட்டு 14 என கூறுகிறார்கள் அதை நீங்கள் கண்டுபிடித்து தர வேண்டும் என தெரிவித்தார்
புதிய கல்விக் கொள்கை திட்டம் ஏற்புடையது அல்ல என கூறி கையெழுத்து போடவில்லை எனவே அவர்கள் பாஜகவின் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்தார்
விஜய் காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சனம் வைக்கவில்லை காங்கிரசை கூட்டணிக்கு கொண்டுவர திட்டமா? என்ற கேள்விக்கு
அது குறித்து எங்களது அகில இந்திய தலைமை தான் தீர்மானிக்கும் அவர் காங்கிரசை திட்டாதாதற்கு காரணம் காங்கிரசை திட்ட ஒன்றும் இல்லை. காங்கிரஸ் தான் அடிப்படை ஆதாரங்களை மக்களுக்கு ஏற்கனேவே கொடுத்து உள்ளது என தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments