முசிறி அருகேதண்ணீர் வசதி இல்லாததால் ஒரு குடம் தண்ணீரை வைத்து ஈம சடங்குகளை செய்யும் கிராம மக்கள்-திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தமாங்குடி கிழக்கு கிராமத்தில் 420 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் யாரேனும் இயற்கை எய்தினால் அவர்கள் உடலை இடுகாட்டில் வைத்து ஈம சடங்கு செய்து நல்லடக்கம் செய்வதற்கு போதிய தண்ணீர் வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக சிரமமடைந்து வருகின்றனர்.இடுகாட்டிற்கு இறந்தவர் உடலை கொண்டு செல்லும் கிராம மக்கள் அங்கு நல்லடக்கம் செய்யவும், பின்னர் குளித்துவிட்டு சடங்கு சம்பிரதாயங்களை
முடிப்பதற்கு மிக மிக அடிப்படி தேவையாக அமைவது தண்ணீர் ஒன்றே ஆகும்.இந்த அடிப்படை தண்ணீர் இல்லாமல் கடும் சிரமமடைந்து வரும் சேந்தமாங்குடி கிழக்கு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது-எங்கள் கிராமத்தில் இறப்பு ஏற்பட்டால் இருநூறு முன்னூறு பேர் வரை இறந்தவர் உடலை ஊர்வலமாக சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரித்தாலோ? புதைத்தாலோ? ஈம சடங்குகள் செய்துவிட்டு குளித்து விட்டுதான் செல்வதை பாரம்பரியமாக கொண்டுள்ளோம்.
முன்பெல்லாம் அருகிலேயே வாய்க்காலில் தண்ணீர் ஓடும் அதில் குளித்துவிட்டு வீட்டிற்கு செல்வோம். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக வாய்க்காலில் போதிய தண்ணீர் வருவதில்லை. மூன்று அல்லது நான்கு மாதங்கள் தான் தண்ணீர் வரும் அதுவும் சில வருடங்களாக சரியாக வருவதில்லை.இதுபோன்ற தண்ணீர் வராத நாட்களில் வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டுவந்ததுதான் குளித்துவிட்டு செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் ஒரு குடம் கொண்டு வந்து இறந்தவர் உடலுக்கு கொல்லி
வைப்பவர் மட்டுமே குளித்துவிட்டு மற்றவர்கள் எல்லாம் வீட்டிற்கு சென்று குளிக்கின்றோம். அடிப்படை தண்ணீரே இல்லாமல் ஈம சடங்குகளை நாங்கள் எப்படி செய்வது?இந்த சுடுகாட்டில் ஈம சடங்கு செய்துவிட்டு குளிப்பதற்காக ஒரே ஒரு ஆழ்துளை போர்வெல் போடப்பட்டு அடிபம்பு அமைக்கப்பட்டது. அதுவும் ஒரு மாதத்திலேயே இயங்காமல் போய்விட்டது.இதனால் பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டது. அதுவும் ஒரு வருடத்திற்கு மேலாக ஆன நிலையில் அதற்கென ஆழ்துளை போர்வெல்லோ? அல்லது தண்ணீர் வருவதற்கான நடவடிக்கையோ எடுக்காமல் வெற்று தொட்டியாகவேதான் கிடக்கிறது.
எனவே உடனடியாக எங்கள் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடிப்படை தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேர்ந்தமாங்குடி கிழக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments