திருச்சி மாவட்டம் ஜமுனாபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருத்தலையூர் ஊராட்சியில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துறையூர் – முசிறி சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் ஊராட்சி நிர்வாகம் முறையான குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தனர்.
இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments