மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் இணை அமைச்சர் முருகன் ஆகியோருடன் திருச்சி வந்தார்.
இன்று காலை, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் வழிபாடு நடத்தினார். கோவிலுக்கு சென்ற போது, அங்கு திரண்டிருந்த மக்களுடன் கை குலுக்கினார். தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வடக்கு வாசலில், அமைச்சர் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அங்கு திரண்டு இருந்த மக்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டபடி, தடுப்புகளை மீறி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கை குலுக்கி மகிழ்ந்தனர்.
முதலில், தாயார் சன்னத்திக்கு சென்று தரிசனம் செய்த அமித்ஷா, சக்கரத்தாழ்வார், உடையவர் சன்னதிகளுக்கும், மூலவர் சன்னதிக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின், தெற்கு வாசல் வழியாக புறப்பட்டுச் சென்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments