திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்த சரவணன் மகன் செல்வம் (14) கரட்டாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார், நல்ல வன்னிப்பட்டியைச் சேர்ந்த பாரதி (15) மாணவன் நடுவலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்,
நேற்று மாலை சுமார் ஆறு மணிக்கு மேல் கிராமத்தில் வாலிபால் விளையாடும் பொழுது இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் பாரதி கையால் செல்வத்தை தலையில் பலமாக தாக்கியுள்ளார், இதில் பலத்த உட் காயம் அடைந்த பாரதி இன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு துறையூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர், சோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் மாணவனை நல்ல வண்ணிப்பட்டி கிராமத்திற்கு வீட்டிற்கு கொண்டு வந்து விட்டனர்,
தகவல் அறிந்த புலிவலம் போலீசார் இறந்த செல்வம் மாணவன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மாணவர்கள் ஒருவருக்கொருவர் கையால் அடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments