வாந்தி, வயிற்றுப்போக்கு என நமக்கு திடீரென ஏற்படும் உடல் உபாதைகள் சோர்வை ஏற்படுத்த கூடியது. இந்த பிரச்சனைகள் ஏற்பட பல காரணிகள் உள்ளது. சாப்பிட்டது சேராமல் இருப்பது, செரிமானம் ஆகாமல் பிரச்சனை ஏற்படுவது போன்றவை அவற்றில் சில காரணங்கள். பிரச்சனை ஏற்பட்டதும் வீட்டிலேயே சில விஷயங்கள் மேற்கொள்வதும், உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெறுவதும் முக்கியமாகும் என கூறும் மருத்துவர் ராகவி, உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகளை கூறுகிறார்.

பல்வேறு காரணங்களால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளால் உடனடியாக நம் உடலில் குறையும் சக்தி, நீர் சக்தியாகும். உடலுக்கு நீர்சத்து மிகவும் முக்கியம் நீர்சத்து குறைவதால் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், நீர்ச்சத்தை அதிகப்படுத்துவது மிக முக்கியமானது. இதற்கு சிட்ரஸ் அதிகம் உள்ள பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது, திரவ உணவுகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் பருகுவது போன்றவை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை.

அதேபோல இந்த மாதிரியான நேரங்களில் செரிமானத்திற்கு கடினமான உணவுகளை உண்பதை தவிர்ப்பதும் முக்கியமானவை. வாந்தியுடன், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டால் ORS என்பதும் சர்க்கரையும், உப்பும் கலந்த பானத்தை பருகுவது தான். இதனால் உடலில் ஏற்படும் நீர்சத்து குறைபாடு சரி செய்ய படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ORS கரைசல் என மருந்தாகத்தில் கிடைக்கும் அதனை வாங்கியம் பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே எளிய முறையில் இவற்றை நாம் தயார் செய்து பயன்படுத்தலாம்.

வீட்டிலேயே இந்த கரைசலை தயார் செய்ய முதலில் உங்கள் இரண்டு கைகளையும், கரைசல் தயார் செய்யவிருக்கும் பாத்திரத்தையும் சோப் போட்டு சுத்தகமாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். சுத்தமான நீர்- 1 லிட்டர், சர்க்கரை – 6 டீஸ்பூன் (1 டீஸ்பூன் – 5 கிராம்), தூள் உப்பு – half டீஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும். இதனை அவர்களை பருக வைத்து கொண்டே இருக்க வேண்டும். (24 மணி நேரம் மட்டுமே இவற்றை பயன்படுத்த வேண்டும்.) தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பால், சூப், பழச்சாறு அல்லது குளிர்பானங்கள் ORS-ஐ பயனற்றதாக்கும் என்பதால் அவற்றைப் பயன்படுத்த முடியாது. கூடுதல் சர்க்கரை எதுவும் சேர்க்க வேண்டாம். ஒவ்வொரு வயதிற்கு ஏற்றார் போன்று இந்த கரைசலினை எடுத்து கொள்ளும் அளவானது மாறும். குழந்தைகளுக்கு ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 0.5 லிட்டர் ORS பானமும், 2 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 1 லிட்டர் ORS பானமும், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 3 லிட்டர் ORS பானமும் அருந்தலாம்.

ORS கரைசலை பயன்படுத்தும் முன்பு, உடல் உபாதைகள் குறையாமல் இருந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision





Comments