திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் கல்லூரியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தலைமையில் தேர்தல் ஆணையத்தின் இலச்சினை வடிவில் நின்று மாணவ, மாணவிகள் இன்று (23.01.2026) உறுதிமொழி எடுத்தனர்.
இந்நிகழ்வில், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ந.சீனிவாசன், வட்டாட்சியர்கள் ஆ.செல்வகணேஷ் (ஸ்ரீரங்கம்), சக்திவேல் முருகன் (தேர்தல்), கல்லூரி செயலர் பொறி.ராஜசேகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், இந்திரா கணேசன் கல்லூரி நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments