தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் இன்று தொடங்கிய நிலையில், திருச்சி மேற்கு சட்டமன்றதொகுதிக்குட்பட்ட தில்லை நகர், தென்னூர், உறையூர் சாலை, சாஸ்திரி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட படிவத்தினை வழங்கி, SIR செயலி மூலம் வாக்காளர் விபரங்களை சேகரித்து வருகின்றனர்
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 2543 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தலைமையில் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எனப்படும் BLOS வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் விபரங்கள் அடங்கிய பட்டியலை வைத்து சரிபார்த்து பின்னர், அதில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட செயலிமூலம் வாக்காளருக்கு வழங்கப்பட்ட படிவத்தில் உள்ள கியூஆர் கோர்டினை ஸ்கேன் செய்து
 அதன்பின்னர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்ட இரண்டு படிவத்தில் ஒன்றினை தற்போது பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்றும், தெரியாத விபரங்களை பூர்த்தி செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு அடுத்தவரும் வாரங்களில் மீண்டும் வீட்டுக்கு வரும் வரும் வரும் வரும் வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பூர்த்தி செய்த வடிவங்களை வழங்க வேண்டும் என்றும் விவரங்களை தெரிவித்து வாக்காளர் சிறப்பு திருத்த முகம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



            
            
            
            
            
            
            
            
            
            
Comments