இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2026 ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்யும் பொருட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளிலும் 04.11.2025 அன்று முதல் சிறப்பு தீவிரத்திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நேர்வில், இந்திய தேர்தல் ஆணையத்தால், சிறப்பு தீவிர திருத்தம், 2026 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி.ஆ.லெட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.01.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை புரிந்து,

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, 140 திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, சேவாசங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 141 திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் நடுநிலைப் பள்ளி, சுப்ரமணியபுரம் ஜான் பிரிட்டோ மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் 142 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டூர் ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குண்டூர் கிராம சேவைமைய கட்டிடம் ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி.ஆ.லெட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments