அங்கன்வாடி மையத்தின் அருகில் கொட்டப்படும் கழிவுகள் – நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் – புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்
திருச்சி மாவட்டம் ,லால்குடியை அடுத்த அகிலாண்டபுரம் அருகே அப்பாதுரை ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளார் நகரில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது . தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி திறக்கப்பட்ட நிலையில் அங்கன்வாடி மையத்தின் அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது ,இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார்
அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதனால் நோய் தொற்று ஏற்படுமோ என்கின்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது .மேலும் அகிலாண்டபுரம் அப்பாத்துரை ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளலார் நகர் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற நோய்கள்
பரவுவதால் பெற்றோர்கள் மிகுந்த மனவேதனையில் ஆளாகியுள்ளனர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இதே இடத்தில் குப்பைகள் கொட்டாதவாறு தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments