திருச்சியில் அருகே தொடர் மழையின் காரணமாக வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதி -ஆய்வு செய்த பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர்
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் ஊராட்சியில் தென்னரசூர் பகுதியில் நேற்று இரவு கோடை கனமழையின் காரணமாக 2 மணி நேரம் விடாமல் பெய்த கிராமத்தில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது.
இரவு நேரம் என்பதால் மின்சாரம் இல்லாமல் இடுப்பளவு தண்ணீரில் 10 க்கும் மேற்பட்ட வீடுககளில் உள்ள மக்கள் ஆகிவிட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகம் தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கயிற்றின் மூலம் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இரவு நேரம் என்பதால் அவர்களுக்கு அங்கன்வாடி மையத்தில் உணவு, உறங்குமிடம் ஒதுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, ஜெயலட்சுமி கருணாநிதி முன்னாள் மாவட்ட கவுன்சிலர், செல்வராஜ் புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர், ரசியா கோல்டன் ராஜேந்திரன் முன்னாள் புள்ளம்பாடி சேர்மன், வெற்றிச்செல்வி
ராமலிங்கம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், முத்துக்குமார் புள்ளம்பாடி நகர செயலாளர், சுப்ரமணியம் கீழரசூர் கிளைக் கழக செயலாளர் மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகள் செய்து ஆறுதல் கூறினார்..
மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர், RI,கீழரசூர் ஊராட்சி செயலர் கந்தசாமி, கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் சீதா, மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments