திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து பாசனத்திற்காக பிரியும் கிளை வாய்க்கால்கள் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்காலைத் தவிர மற்ற வாய்க்கால்கள் அனைத்தும் முக்கொம்பு இருக்கு (மேலணை) மேற்கே உள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிப்பு போன்ற பிரச்சினைகளால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் பொழுது திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு மேற்கே இருந்து பிரியும் பாசன கிளை வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் தங்கு தடை என்று செல்லும் இதனால் மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி எந்தவித பாதிப்பும் இருக்காது.
ஆனால் தஞ்சை மாவட்டத்திற்கு தண்ணீர் தேவை இல்லை என்று கூறி காவிரி ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்படும் பொழுது அவர்களோடு சேர்ந்து முக்கொம்பு கிழக்கே ஸ்ரீரங்கம் மேலூரில் இருந்து பிரியும் நாட்டு வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் பகுதியான மேலூர், ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில்.
திம்மராய சமுத்திரம், பொண்ணு ரங்கபுரம், திருவளர்ச்சோலை, பணயபுரம், உத்தமர் சீலி, கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் ஸ்ரீரங்க நாட்டு வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர்வரவில்லை என்றால் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்காலிலும் தண்ணீர் வராது இதனால் இந்த பகுதியில் உள்ள 4000 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல் காயும் சூழ்நிலை ஏற்படும். ஒரு சிலர் மட்டுமே மின்சார மோட்டார்கள் வைத்துள்ளனர். அவர்கள் தங்களது விளைநிலங்களுக்கு அதை பயன்படுத்திக் கொள்கின்றனர் மற்றவர்கள் பெரும்பாலும் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்காலில் வரும் தண்ணீரை கொண்டுதான் விவசாயம் செய்து வருகின்றனர்.
இது குறித்து பல ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் தலைப்பை திருச்சி முக்கொம்பில் இணைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை
தற்பொழுது பெய்து வந்த தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்திற்கு தண்ணீர் தேவை இல்லை என்பதற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்காலில் தண்ணீர் வருவதில்லை. அதனால் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்காலை நம்பி விவசாயம் செய்துள்ள விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போர்கால அடிப்படை ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் தலைப்பை திருச்சி முக்கொம்பு (மேலணை)யில் இணைத்து திருச்சி மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் உள்ள கிளை வாய்க்கால்கள் மூலம் பயன்படுவது போல் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் பகுதியை பாசனக்காரர்களும் பயனடைவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கல்லணையை நடுகரை பகுதி விவசாயிகளிடம் கேட்ட பொழுது ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் மூலம் சுமார் 4000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெற்று வருகிறது. இந்த பகுதி திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் மட்டும்தான் முக்கொம்பு கிழக்கே இருந்து பிரிந்து வருகிறது தஞ்சை மாவட்டத்திற்கு தண்ணீர் தேவை இல்லை என்றால் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் 4 ஆயிரம் ஏக்கரும் பாதிக்குப்புக்கு உள்ளாகிறது ஆனால்தஞ்சை மாவட்டத்திற்கு தமிழக அரசு அறிவிக்கும் பல்வேறு சலுகைகள் நிவாரணங்கள் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் பாசனதாரர்களுக்கு கிடைப்பதில்லை.
அதேபோல் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் தலைப்பை இணைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் தமிழக அரசு பொது மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் பல்வேறு முகாம்களை நடத்தி அதற்கான தீர்வுகளை கண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக பழைய கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.
இந்த முகாமில் ஒரு விவசாயி ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் தலைப்பை திருச்சி முக்கொம்பில் இணைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து உள்ளார்.
அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் மூலம் 3700 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது என்றும்
இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி பகுதியில் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்களில் மூன்று மூடி விட்டார்கள் என்று அதனால் இணைக்க முடியாது என்றும் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பை எடுப்பது யார் ஆக்கிரமிக்க விட்டது யார் இந்த ஆக்கிரமிப்பை எடுக்க வேண்டியவர்கள் யார்.
தங்கடைய பணியை சரியாக செய்திருக்க வேண்டும் செய்யவில்லை தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் முக்கொம்பு கொண்டு போய் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்காலை இணைக்க வேண்டும் என்றால் ஆக்கிரமிக்கும் உப்பில் உள்ளது அதனால் இணைக்க முடியாது என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளனர்.
இது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்கால்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தால் அதனை உடனடியாக ஆக்கிரமிப்பு எடுப்பதுடன் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் தலைப்பை திருச்சி முக்கொம்பு இணைக்க வேண்டும் என என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments