நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்க துறை சார்பில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருச்சி மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 174 ஊரக குடியிருப்புகளுக்கான ரூ199.22 கோடி திட்ட மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் (ஜல் ஜீவன் மிஷன்)துவக்க விழா நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு திருச்சி மாவட்டத்தை பொறுத்த அளவு எஸ்.ஐ. ஆர் பணிகள் திருப்திகரமாக நடந்து வருகிறது. எங்களுடன் மாற்றுக் கட்சிக்காரர்களும் இணைந்து பணியாற்றுகிறார்கள். எல்லாரும் ஓட்டு போட வேண்டும் அதற்கான பணிகளை நாங்களும் செய்து வருகிறோம். சர்வர் குளறுபடி காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் 17 லட்சம் பேருக்கு இதுவரை விண்ணப்ப படிவங்களை கொடுத்துள்ளார்.
மூணு மாதத்தில் தேர்தலை வைத்துக்கொண்டு எஸ்.ஐ.ஆர் பணிகளை இப்போது நடத்த வேண்டாம்.தேர்தலை வைத்துக்கொண்டு எஸ் ஏ ஆர் பணியில் நடத்துவது பயமாக இருப்பது அதற்காகத்தான் அனைத்து கட்சி கூட்டம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து நடத்த வேண்டாம் என குறிப்பிட்டார்.
குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டதிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவரை 4.22 இரண்டு கோடி மக்களுக்கு தான் குடிநீர் வழங்கப்பட்டது. புதிதாக ஒரு கோடியே 9 லட்சம் பேருக்கு கொடுத்துள்ளோம்.
புதிதாக ஒரு கோடி பேருக்கு மேலும் ஒரு கோடி பேருக்கு கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஜல்ஜீவன் திட்ட மூலம் மத்திய அரசு ஒவ்வொரு பணிக்கும் இருபது சதவீதம் நிதி கொடுக்கும் அதில் முழுமையாக வராததால் எங்களால் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை அதன் மூலம் லோன் கிடைக்கும் அதனால் எங்களால் கூட்டு குடிநீர் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்றார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட ஆட்சியர் சரவணன், மற்றும் துறை அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments