திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் பராமரிப்பின் கீழ் கம்பரசம்பேட்டையில் இயங்கி வரும் தலைமை நீர்ப்பணி நிலையம் (MPS), கலெக்டர் வெல் – டர்பைன் நீர்ப்பணி நிலையம் மற்றும் கலெக்டர் வெல் திருவெறும்பூர் – கே.எஃப்.டபிள்யூ (KFW) ஆகிய மூன்று நீர்ப்பணி நிலையங்களிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யும் முக்கிய குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த உடைப்பினை 02.12.2025 (செவ்வாய் கிழமை) அன்று காலை நேரத்திற்கான குடிநீர் விநியோகத்திற்கு பிறகு சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே மேற்கூறிய நர்ப்பணி நிலையங்களிலிருந்து குடிநீர் பெறப்படும் மரக்கடை, விறகுப்பேட்டை, சிந்தாமணி, ராக்போர்ட், திருவெறும்பூர், வள்ளுவர் நகர், பழைய எல்லக்குடி, புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர் மற்றும் ஆலத்தூர் ஆகிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு 03.12.2025 அன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது.
மீண்டும் 04.12.2025 (வியாழக்கிழமை) முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையர் லி. மதுபலன், அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments