தண்ணீர் அமைப்பு மற்றும் இந்திரா காந்தி மகளிர் கல்லூரியின் வணிக மேலாண்மைத் துறை தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் இன்று பச்சைமலை “பசுமை உலா, ” நிகழ்வு நடைபெற்றது .இந்நிகழ்வில் பச்சமலை குறித்த முழுமையான சூழலியல், உயிரியல், பச்சமலையின் நிலவியல் அமைப்புகள், வானியல், மக்களின் பண்பாடு அங்கு வாழும் அரிய உயிரினங்கள் ,
ஊர்வன, பறப்பன, பூச்சி இனங்கள், விளையும் பயிர்கள், பழங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக இந்தியாவிலேயே நாலாவது பெரிய வடிவிலான நீல நிறப் பட்டாம்பூச்சி அரிய உள்ளூர் உயிரினம் என்று சொல்லப்படுகிற அரிய வகை பட்டாம்பூச்சியை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அது மட்டுமல்லாமல் நீர்நிலை மேலாண்மை, நீர் பயன்பாடு, அன்றாடம் நாம் பயன்படுத்தும் குடிநீரில் நாம் செய்ய வேண்டிய நெறிமுறைகள், நெகிழி பயன்பாடு குறைப்பு, துணிப்பை பயன்பாட்டை அதிகரிக்கச் செய்தல், மற்றும் உடல் நலத்துக்கு ஏற்ற நல்ல உணவை அடையாளப்படுத்தல் உடல் நலத்தை பராமரிப்பது, உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் திரு கே. சி நீலமேகம் தலைமை வகித்தார்.
தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி. சதீஷ்குமார் முன்னிலை வகித்து மாணவர்களை வழி நடத்தினார், அவர்களுக்கான விழிப்புணர்வு உரை வழங்கி கிழக்குத் தொடர்ச்சி மலையின் சிறப்பு இயல்புகளை கிழக்குத் தொடர்ச்சி மலையினுடைய அரிய வகை உயிரினங்கள், பழ வகைகள் மற்றும் பாதுகாப்பு அது நமக்கு தரக்கூடிய சூழலியல் சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்தார். உடன் அமைப்பின் துணைச் செயலாளர் திரு. ஆர்.கே ராஜா அவர்கள் கலந்து கொண்டார்.
உலக பாம்பு தினமான இன்று துறையூர் பகுதியைச் சேர்ந்த நவீன் கார்டன் உயிரியல் பண்ணையினுடைய நிறுவனர் திரு. நவீன் கிருஷ்ணன் அவர்கள் பங்கேற்றார். பாம்புகளின் சிறப்பியல்புகள் குறித்தும், அதைப் பற்றிய விழிப்புணர்வையும் அது கடித்தால் நாம் செய்ய வேண்டிய தற்காப்பு, பாதுகாப்பு, மீட்டெடுப்பு, ஆகியவற்றை குறித்த முழுமையான அறிவியல் விளக்க உரை வழங்கினார் .பாம்பு என்பது அச்சமூட்டக்கூடிய உயிரினம் அல்ல அது உணவு சங்கிலி முதன்மையான அங்கம் எனவே அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வை வழங்கினார்.
இந்நிகழ்வில் வணிக மேலாண்மைத்துறை பேராசிரியர் சௌந்தர்யா அவர்கள் பங்கேற்றார். வணிக மேலாண்மைத் துறை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டனர்.
அனைவரும் சூழலியல் பாதுகாப்பு குறித்து அறிந்துக் கொண்டு அவற்றைப் பாதுகாத்திட உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
Comments