திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வடக்குப் பகுதியில் தனது பிரச்சாரத்தை ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் லால்குடியில் உள்ள கல்லக்குடி ரயில் நிலையத்தை பார்வையிடுகிறார்.

Advertisement
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்….”எனது தாத்தா (கருணாநிதி) ஹிந்தியை எதிர்த்து போராட்டம் நடத்திய கல்லக்குடி ரயில்வே நிலையத்தை முதல் முறையாக பார்வையிடுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் தமிழகத்தில் இந்தி திணிப்பு தொடர்கிறது. இந்திக்கு நாங்கள் எதிரி அல்ல. இந்தி திணிப்புக்கு தான் எதிரி. பெரியப்பா (மு.க அழகிரி) குறித்த செய்திகள் எனக்கு தெரியாது. நான் அந்த செய்தியை பார்க்கவில்லை. இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் பாரதிய ஜனதா கட்சி இந்தியை தணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தமிழக மக்கள் ஒருபோதும் அதை அனுமதிக்கமாட்டார்கள்” என கூறினார்.

தொடர்ந்து தற்போது முசிறி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்

Advertisement







Comments