Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

1,716 கிராம் எடை; 505 காசுகள்!’ – திருச்சி திருவானைக்காவல் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் புதையல்!

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் அன்னதானக் கூடத்திற்கு பின்புறமுள்ள வில்வமரம் அருகே பூங்கா அமைப்பதற்காக பராமரிப்பு பணிகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது மண்ணுக்கு அடியில் ஒன்று சுத்தம் செய்யும்போது சிறிய செம்பு குடுவை தென்பட்டது .அதனை எடுத்து பார்த்தபோது உள்ளே சிறிய வட்ட வடிவிலான நாணயங்கள் இருந்தது அவைகள் தங்கமாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்து பின்பு அதனை சோதனை செய்ய போது அவை தங்க நாணயங்கள் என கண்டறியப்பட்டன .

Advertisement

அந்த தங்க நாணயத்தில் ஒரு நாணயம் அரபு எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள தங்க நாணயங்கள் மூன்று கிராமில் இருந்து மூன்று அரை கிராம் வரை எடையுள்ளதாக உள்ளது. மொத்தம் 505 தங்க நாணயங்கள் அந்த சிறிய செம்பு குடுவையில் இருந்திருக்கிறது. 1716 கிராம் எடை கொண்டதாக உள்ளது .

தற்பொழுது வருவாய்த்துறையினர் அதனை கோவில் உதவி ஆணையர் இடமிருந்து பெற்று விசாரணையை துவக்கி உள்ளனர் .முகலாய படையெடுப்புக்குப் பின் யாரும் இந்த நாணயங்களை புதைத்து வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தங்க நாணயங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என வருவாய்த் துறையினர் குறிப்பிடுகின்றனர்.

கிலாண்டேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு அருகே நீண்டகாலமாக பயன்படுத்தாமல் கிடந்த பகுதியில் தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *