Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

பாரம்பரியமான சொப்பு சாமான்களை கொண்டு விளையாடும் குழந்தைகள் அடையும் பயன் என்ன?

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாரம்பரியமான சொப்பு சாமான்களை கொண்டு விளையாடும் குழந்தைகள் அடையும் பயன் என்ன தெரியுமா சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சொப்பு சாமான்களைக் கொண்டு விளையாடும் குழந்தைகள் அடையும் பயன் என்ன தெரியுமா நிகழ்வில் பேசுகையில்…. தொழிற்நுட்ப வளர்ச்சியால் குழந்தைகள் அலைபேசியில் பல்வேறு செயலி மூலம் திரையில் விளையாடும் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதால் மனசோர்வு, மனஉளைச்சல் மற்றும் உடல் உழைப்பு குறைவதால் பாதிப்புகுள்ளாகிறார்கள்.

மேலும், சில குழந்தைகளின் பேசும் திறனும் பாதிக்கப்படுகிறது. இது போன்ற குறைபாடுகள் எதுவும் குழந்தைகளை பாதிக்காமல் இருக்க நமது பாரம்பரிய சொப்பு சாமான்களைக் கொண்டு விளையாட குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். மற்ற விளையாட்டுகளை குழந்தைகள் எளிதில் விளையாடி கற்றுக் கொள்ளலாம்.

ஆனால் சொப்பு சாமான்கள் மட்டும், பெற்றோர்கள் அல்லது வீட்டின் பெரியவர்கள் உடன் சமைக்க வேண்டும். இதனால் குழந்தைகள் காய்கறிகள், மசாலா பொருட்கள், அரிசி, அடுப்பு, நெருப்பு என கையாளும் போது அதன் பெயர்கள், பயன்கள், எப்படி பயன்படுத்துவது என அனைத்தும் அறிந்து கொள்ள உதவுகிறது.

சொப்பு சாமான்களை ஊடகமாக பயன்படுத்தி குழந்தைகள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அரிசியின் நிறம் அரிசியின் வகைகள் குறித்து அறிந்து கொள்ள இயலும். துவரம் பருப்பு, பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, போன்ற பருப்பு வகைகள் பற்றியும், பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற மற்ற பருப்புகளில் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள உதவுகிறது.

தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், என நிலத்தின் மேலே உள்ள காய்கறிகள் பழங்கள் பற்றி குழந்தை அறிந்து கொள்ள உதவுகிறது. நிலத்தின் உள்ளே வளரும் கருணை கிழங்கு, சேப்பங்கிழங்கு, சக்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் போன்ற கிழங்கு மற்றும் காய்கறி வகைகள் பற்றி குழந்தைகள் அறிந்து கொள்ள உதவுகிறது.

காய்ந்த மிளகாய், மிளகு, இலவங்கம், பட்டை, அண்ணாசி பூ போன்ற வாசனை மசாலா பொருட்கள் பற்றி குழந்தைகள் அறிந்து கொள்ள உதவுகிறது. மல்லித்தூள், மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், மிளகு தூள், போன்ற தூள் வகைகளை பற்றி குழந்தைகள் அறிந்து கொள்கிறார்கள். சிறுகீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலை கீரை, புளித்தக்கீரை, கொத்தமல்லி கீரை, புதினா, கருவேப்பிலை போன்ற கீரை வகைகளை பற்றி குழந்தைகள் அறிந்து கொள்கிறார்கள்.

சமைக்க பயன்படும் பொருட்களில் வாணலி, கரண்டி, தோசைக்கல், தோசைக்கரண்டி, குழிக்கரண்டி, காய்கறி வெட்டும் கத்தி, போன்றவற்றை குழந்தைகள் அறிந்து கொள்ள உதவுகிறது. மேலும் சொப்பு சாமான்கள் கொண்டு கூட்டாஞ்சோறு தயாரிக்கவும் தயாரித்த உணவினை பிற குழந்தைகளுடன் பகிர்ந்து உண்ணும் பண்பாட்டையும் பெறுகின்றனர் என்றார்.

திருச்சி பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்று துறை முதுகலை மாணவர்கள் அபிஷேக், அனு பிரியா, அரிஸ்டோ வசந்தகுமார், திவாகரன், கிஷோர் குமார், கிஷோர், சஞ்ஜய்குமார், லோகேஷ்வரன், உதயகுமார், நரேஷ் பாபு, சித்தார்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *