திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் ஆண்டார் தெரு, சின்னக்கடைத்தெரு, சிந்தாமணி, டவுன் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


அப்போது பேசுகையில் அதிமுக அரசு பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு என்று எதுவும் செய்யவில்லை. இந்த தொகுதி அதிமுகவின் அமைச்சரின் தொகுதியாக இருந்தாலும் குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை கூட ஏற்படுத்தி தரவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றார்.

இந்நிகழ்வுகளில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81







Comments