திருச்சியில் மார்ச் 11ஆம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் பஞ்சப்பூர் அருகே நடைபெற உள்ளது இந்த பொதுக்கூட்ட நடைபெற உள்ள இடத்தில் ஆய்வு செய்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது..,

தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற கூட்டம் திருச்சியில் நடைபெற போகிறது.
வரலாற்றில் பார்க்க முடியாத திமுகவுக்கு எதிரான ஒரு பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தமிழக மக்களை அன்போடு அழைக்கிறோம்.
மத்திய அரசு
எங்கேயும் இந்தி திணிப்பது கிடையாது.
துணை ராணுவம் தேர்வில் பிரதமர் மோடி வந்த பிறகு தான் தமிழில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் உண்மையாக தமிழுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

உலகம் முழுவதும் திருக்குறளை 35 மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இங்கு இருப்பவர்கள் கும்மிடிப்பூண்டி ஓசூரை தண்டாதவர்கள்.
திமுக தமிழுக்காக என்ன செய்தது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக திமுக உருப்படியான எந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர் என கேள்வி எழுப்பினார்..
ஆரம்ப கல்வியை தமிழில் கற்று கொள்ள வேண்டும் என மும்மொழி கொள்கை கூறுகிறது. தேர்தலுக்காக அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல.
தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பிரதமர் மோடி இதுவரை 12 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார். 26 லட்சம் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
7 லட்சம் பேருக்கு தற்பொழுது வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு கட்டிக் கொடுப்பதற்கு திமுக தடுத்து வருகிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் ரயில்வே திட்டங்களுக்கு 800 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வந்த பின்பு ரயில்வே திட்டங்களுக்கு 8000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் எப்போதும் தேர்தலுக்காக அரசியல் செய்வது இல்லை.
திமுகவை வீட்டிற்கு அனுப்புவதற்கு தமிழக மக்கள் தயாராக உள்ளனர்.
தேர்தல் என்று நடக்குதோ அன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் இருந்தது. மக்கள் செழிப்பாக இருந்தார்கள்.

திமுக காங்கிரசுக்கு நான் ஆருடம் சொல்ல முடியாது.
காங்கிரஸ், திமுகவுக்குள் கொண்டு நெருடல் இருக்கிறது
என தெரிவித்தார்.
உடன் திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments