தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க காத்திருந்த பொதுமக்களை அழைத்து அவர்களிடம் முதலமைச்சர் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருநங்கை கஜால் (SAFE Trust MD ) தமிழக திருநங்கைகளின் மேம்பாடு குறித்து மனு கொடுத்தார்.


தமிழ்நாட்டில் 2020 ல் திருநங்கைகள் வாரியத்தின் படி நான் வாரிய உறுப்பினராக இருந்த பொழுது மொத்தம் 15000 திருநங்கைகள் என கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி அரசு மூலம் மாவட்டம் தோறும் திருநங்கைகளுக்கு தொழிற்சாலைகள் அமைத்துத்தர கோரி
15000க்கும் மேற்பட்ட தகுதியுடைய திருநங்கைகளுக்கும் அரசு வேலை, குடும்ப சொத்தில் திருநங்கைகளுக்கு சமபங்கு பெறுவதற்காக உரிமைகள் குறித்து அம்மனுவில் கோரிக்கையாக குறிப்பிட்டிருந்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments