Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்த புன்னகை என்ன விலை ? வட்டார கல்வி அலுவலரின் நெகிழ்ச்சி சம்பவம்:

திருச்சி மணிகண்டம் தீரன் நகர் ஸ்ரீ காமாட்சியம்மன் தொடக்கப் பள்ளி ஆண்டாய்வு நடந்தது. அங்கு மதியம் உணவு மணி அடித்தது அனைத்து மாணவர்களும் உணவுடன் வரிசையாக அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தனர். கடைசியாக முதல் வகுப்பு மாணவர் ருத்ரேஸ்வரன் (சிறப்புக் குழந்தை)வந்து அமர்ந்தார். கையில் எதுவும் இல்லை. அமைதியாக உட்காந்தார். சிறிது நேரத்தில் கடைசியாக இந்த ஐந்தாம் வகுப்பிலிருந்து ஒரு மாணவன் ஷேக் சிக்கந்தர் ஓடி வந்தார்.முதல் வகுப்பில் நுழைந்து உணவுப்பையோடு வந்து ருத்ரேஸ்வரனுக்கு அனைத்தையும் கனிவாக தாயினும் சாலப்பரிந்து பரிமாறி அவரை சாப்பிட வைத்தார். தண்ணீர் பாட்டிலையும் திறந்து வைத்தார். இருவர் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது. தன் உணவைப் பெறுவதற்கு கடைசியாக சென்றார் ஷேக் சிக்கந்தர்.

நான் தலைமை ஆசிரியர் அறையிலிருந்து அனைத்து நிகழ்வையும் கவனித்து தலைமை ஆசிரியர் “மரிய கொறற்றி அவர்களிடம் கேட்டேன்…, “தினம் ஒருவர் இவ்வாறு செய்வார்கள்” என்று கூறினார். என் மனம் நெகழ்ச்சி அடைந்தது.

இந்த நாட்டில் இன்னும் அன்பும் கருணையும் உயிரோடு உள்ளது என்றால் அதற்கு காரணம் இங்குள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்தான் அவற்றை காப்பாற்றுங்கள் அறம் காக்கப்படும்.என்கிறார் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *