Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அமைச்சர்கள் நேரு, மகேஸ் என்ன ஸ்கோர்? முதல்வர் தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல் மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் உரையாற்றினார்.

உரையில்  மாண்புமிகு அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும்,சட்டமன்ற உறுப்பினர்களையும்,மாவட்ட ஆட்சித் தலைவரையும்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளையும், அரசு அலுவலர்களையும், பத்திரிக்கை மற்றும் ஊடக துறையைச் சார்ந்திருப்பவர்களையும் வரவேற்று அவர் உரையை தொடங்கினார். திருச்சியில் ஒரு சிறப்பான விழாவில் இது விழா அல்ல ஒரு மாநாடு அப்படிப்பட்ட மாநாட்ட ஏற்பாடு செய்திருக்கக் கூடிய அமைச்சர் என்னுடைய ஆருயிர் சகோதரர் நேரு அவர்களுக்கு முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நேருவைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது என்று பலமுறை சொல்லி இருக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் நேருவிற்கு நகர்ப்புற வளர்ச்சித்துறையை வழங்கினோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றி இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மாநகரங்கள் நகரங்கள் பேரூர் என்று அத்தனை மிகச் சிறந்த வகையில் வளர்த்து வருகிறார்.அதற்குக் எடுத்துக்காட்டு தான் இன்றைக்கு பஞ்சப்பூரில் திறந்து வைத்துவிட்டு வந்திருக்கக்கூடிய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பெயரில் அமைந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்.அதை பார்த்தவுடன் எனக்குள்ள என்ன தோன்றியது என்றால் இது “பஞ்சப்பூர் இல்லை. அனைத்து ஊரையும் மிஞ்சப் போகும் மிஞ்சப்பூர்” என்று தோன்றியது.

ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்துகின்ற வகையில் பிரம்மாண்ட பேருந்து முனையமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் இதய பகுதியாக விளங்குகின்ற இந்த திருச்சிக்கு இப்படி ஒரு பேருந்து நிலையம் நிச்சியம் அவசியம் தேவை. நேரு அவர்கள் அவருடைய திருச்சி மாவட்டத்திற்கு மிகவும் சிறப்பாக பார்த்து பார்த்து இதை உருவாக்கினார்.

 அடுத்து திருச்சியிலிருந்து மற்றொரு அமைச்சரும் இருக்கிறார் நம்முடைய தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவர் மட்டும் சாதாரணமானவரா?என்ன பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும்” அரசு பள்ளிகளில் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் “என்று சொன்னார். நேற்று பிளஸ் 2 முடிவுகள் வந்திருக்கிறது ஒவ்வொரு ஆண்டும் அதிக விழுக்காடு மாணவர்கள் தேர்வு பெற்று வருகின்றனர். இந்த ஆண்டும் அப்படிதான். கல்வித் தரமும் பெருமளவு உயர்ந்திருக்கிறது

 இடைநிற்றலை இருக்கக் கூடாது என்று பள்ளிக்கூடம் போகாமல் இருக்கின்ற மாணவர்களையும் வீடு வீடாகச் சென்று அறிவுரை சொல்லி வேண்டிய உதவிகளை செய்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புகிறோம். கடந்த 2022 ஆம் ஆண்டு டெல்லி சென்ற பொழுது அங்கிருந்த மாதிரி பள்ளிக்கூடத்திற்கு திரு கேஜ்ரிவால் முதலமைச்சராக இருந்தபோது சென்றேன். அப்போது அந்த பள்ளிக்கூடத்தை பார்க்கின்றபோது எனக்கு என்ன தோன்றியது என்றால் இதுபோல் இதைவிட சிறப்பாக தமிழ்நாடு முழுவதும் மாதிரி பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்று அப்பொழுது நான் முடிவு செய்தேன்.என்னுடைய அந்த கனவை மிகவும் சிறப்பாக நம்முடைய அன்பில் மகேஷ் அனைத்து மாவட்டத்திலும் செயல்படுத்தி காட்டி இருக்கிறார்

 குறுகிய காலத்திலேயே அங்கே படித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தியாவின் மிகச் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் படிக்கச் சென்று இருக்கிறார்கள் அப்படி செல்கின்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா எடுத்து நாம் எல்லாவித ஆதரவும் செய்கிறோம். நேற்று துவா குடையில் திறந்து வைத்தது போல் நிரந்தர கட்டடங்களையும் உருவாக்கிக் கொண்டு வருகிறோம். அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முதல் கட்டிடத்தை அவருடைய மாவட்டத்தில் கட்டி முடித்து விட்டார் அது மட்டுமல்ல என்னுடைய திருச்சிக்கு ஒரு அறிவு சுரங்கம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து தற்பொழுது பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டு மிகப் பிரம்மாண்டமான அந்த நூலகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

 நேரு அவர்களும் அன்பில் மகேஷ் அவர்களும் இப்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் நன்றாக ஸ்கோர் செய்து எனக்கு நல்ல பெயரை வாங்கித் தருவார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கின்றது.நான் சமீபத்தில் சட்டமன்றத்தில் கூறியது போல இந்த அரசின் வெற்றி என்பது தனிப்பட்ட ஸ்டாலின் வெற்றி அல்ல. அமைச்சர்கள் அதிகாரிகள் கூட்டு முயற்சி கிடைத்த வெற்றி அந்த வகையில் இந்த இரண்டு அமைச்சர்களும் துணையாக இருக்கக்கூடிய துறைச் செயலாளர்கள்,உயர் அதிகாரிகள் அத்தனை பேரையும் நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு உங்கள் சார்பில் என்னுடைய வணக்கத்தையும் செலுத்த விரும்புகிறேன்

 இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைத்து இருக்கின்ற அரசு முதன்மை செயலாளர் திரு கார்த்திகேயன் அவர்களும், மாவட்ட ஆட்சியர் திரு மா.பிரதீப் குமார் அவர்களும் திருச்சி மாநகராட்சி ஆணையர் திரு சரவணன் அவர்களுக்கும் திருச்சி மாவட்டத்தின் அலுவலர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள்.

 தந்தை பெரியார் பிறந்தது ஈரோடு என்றாலும் அவர் மாளிகை கட்டி வாழ்ந்தது இந்த திருச்சியில் தான்.கள்ளக்குடி போராட்டத்தில் கைதான கலைஞர் அவர்கள் திருச்சி சிறையில் தான் அடைக்கப்பட்டார். இது எல்லாவற்றையும் அடையாளமாக தான் இந்த பெரியார் சிலையும் அண்ணாசிலையும் கலைஞர் சிலையும் திருச்சியில் கம்பீரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதை திறந்து வைக்கின்ற பெருமை எனக்கு கிடைத்திருக்கின்றது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *